ADDED : ஜூன் 23, 2024 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலில் ஆனித்திருவிழா ஜூன் 14ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெருமாள்சுவாமி,சிறியகருடன் பெரிய கருடன் சப்பரம், வெற்றி வேர், யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானதேரோட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது.முன்னதாக காலை 7:00 மணிக்கு சுவாமி ,பூதேவி, ஸ்ரீதேவி தேரில் எழுந்தருளினர்.
சாத்துார், சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் மதியம் 2 :00 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து நுாற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.