/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ஆற்றுப்பாலம் நடைபாதை சிலாப்கள் சேதம் பாதசாரிகள் பரிதவிப்பு
/
விருதுநகர் ஆற்றுப்பாலம் நடைபாதை சிலாப்கள் சேதம் பாதசாரிகள் பரிதவிப்பு
விருதுநகர் ஆற்றுப்பாலம் நடைபாதை சிலாப்கள் சேதம் பாதசாரிகள் பரிதவிப்பு
விருதுநகர் ஆற்றுப்பாலம் நடைபாதை சிலாப்கள் சேதம் பாதசாரிகள் பரிதவிப்பு
ADDED : செப் 01, 2024 04:59 AM

விருதுநகர் : விருதுநகர் கவுசிகா நதி ஆற்றுப்பாலத்தின் நடைபாதை சிமென்ட் சிலாப்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் பாதசாரிகள் கால் இடறி விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கவுசிகா நதியில் வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆற்றுப்பாலத்தின் இருபகுதிகளிலும் பாதசாரிகள் செல்ல ஏதுவாக சிமென்ட் சிலாப்கள் ரோட்டின் உயரத்தை விட சிறிது உயரம் கூடுதலாக அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் ரோட்டிலும், பாதசாரிகள் சிலாப்கள் மீதும் சென்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் ஏராளமான சிலாப்கள் சேதமாகியது. இவற்றை முறையாக சீரமைக்காமல் அப்படியே போட்டு வைத்தனர். இவ்வழியாக காலை, மாலை நேரங்களில் ஏராளமானனோர் நடந்து பள்ளி, கல்லுாரிகள், வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் தினமும் கால் இடறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இரவில் நடந்து செல்பவர்கள் சில நேரம் ரோட்டில் விழுந்து விடுகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்த பின்பு ஆற்றுப்பாலத்தின் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாதசாரிகள் கால் இடறி வாகனங்களில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.
இப்பகுதியில் சேதமான நிலையில் சிலாப்களை சீரமைக்க வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆற்றுப்பாலம் சிமென்ட் சிலாப்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.