/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
என்னென்ன ஆவணங்களை கொண்டு ஓட்டளிக்கலாம்
/
என்னென்ன ஆவணங்களை கொண்டு ஓட்டளிக்கலாம்
ADDED : மார் 29, 2024 05:52 AM
விருதுநகர் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள் ஆதார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 ஆவணங்களை காண்பித்து மக்கள் ஓட்டளிக்கலாம்.
புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சு பிழைகள், எழுத்து பிழைகள் ஆகியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் ஓட்டளிப்பதற்காக வந்துள்ள ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருந்தால் அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம், என்றார்.

