/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து தீக்குளித்த பெண் பலி
/
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து தீக்குளித்த பெண் பலி
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து தீக்குளித்த பெண் பலி
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து தீக்குளித்த பெண் பலி
ADDED : மே 24, 2024 02:02 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து, தனக்குத்தானே டீசலை ஊற்றி தீக்குளித்த ராமலட்சுமி, 46, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி, 46, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ். ராமச்சந்திரபுரத்தில் பார்வதிக்கு70 சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது அருகில் உள்ள வீட்டினருடன் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வந்துள்ளார்.
இதனால் மற்றவர்கள் புகார் தெரிவித்ததால் ராமலட்சுமியை வீட்டை காலி செய்ய பார்வதி கூறியுள்ளார். ஆனால், அதனை ராமலட்சுமி கண்டு கொள்ளவில்லை. மார்ச் 29 ல் ஏன் இன்னும் வீட்டை காலி செய்யவில்லை என பார்வதியின் மகள் மகாலட்சுமி கேட்டபோது அவரை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ராமலட்சுமி தன் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் ராமலட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.