ADDED : மே 10, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வைத்திலிங்கபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த பேச்சியம்மாள், 44, என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையான குழுவினர் வைத்தியலிங்கபுரம் மாரியம்மன் கோவில் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த பேச்சியம்மாளிடம் நடத்திய சோதனையில் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.