ADDED : ஏப் 30, 2024 12:11 AM
அ நிறம் | அளவு
சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் 46.
கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இவர் மீண்டும் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
