/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராம்கோ நுாற்பாலையில் ரூ.10 கோடி போனஸ்
/
ராம்கோ நுாற்பாலையில் ரூ.10 கோடி போனஸ்
ADDED : அக் 18, 2024 04:45 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ குரூப் நுாற்பாலை , துணி உற்பத்தி ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை ரூ. 10 கோடி அறிவிக்கப் பட்டுள்ளது.
2023--24 நிதி ஆண்டிற்கான போனஸ் பேச்சு வார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா, இயக்குனர் அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, ராமராஜ் சர்ஜிகல் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, விஷ்ணு சங்கர் மில்ஸ் ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.
இதன்படி நுாற்பாலை துணி உற்பத்தி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
பேச்சு வார்த்தையில் நுாற்பாலை துணி உற்பத்தி பிரிவு தலைவர் மோகனரெங்கன், துணைத் தலைவர் நாகராஜன், நிர்வாக துணை தலைவர் முருகேச பிள்ளை, தலைமை நிதி அதிகாரிகள் அருள் பிரணவம், விஜயகோபால், தொழிற்சங்கம் சார்பில் என்.கண்ணன், விஜயன், ஆர்.கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.