/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல்லை பேராசிரியர் கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்கு மாற்றம் ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் ஆஜர்

ADDED : நவ 21, 2024 01:53 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:திருநெல்வேலியில் நிலத்தகராறில் பேராசிரியர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் நேற்று ஆஜராயினர். விசாரணை 2025 ஜன. 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார் 52, விவசாயம் , ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திருநெல்வேலி அண்ணா நகரில் மனைவி விஜயலட்சுமி, மகள் அனுசுயா, மருமகன் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கே.டி.சி. நகரில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக இவருக்கும் வழக்கறிஞர் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் ஆகியோருக்கும் பிரச்னை ஏற்பட்டு திருநெல்வேலி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
2018 பிப். 26 காலை குமார் வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி மருமகன் செந்தில் குமாரை அரிவாளால் வெட்டி கொன்றது. மருத்துவக் கல்லூரி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் பாலகணேசன், பாலமுருகன், ராக்கெட் ராஜா உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணை மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை 2025 ஜன. 8க்கு நீதிபதி சுதாகர் ஒத்தி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.