ADDED : செப் 27, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று ஒரே நாளில் நாய் கடியால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் நேற்று சங்கரன்கோவில் முக்கு, ஜவஹர் மைதானம், காந்தி கலை மன்றம், சொக்கர் கோயில் பஸ் ஸ்டாப் அருகே, லட்சுமியாபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் நடந்து சென்றவர்களை நாய் கடித்ததால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். பாதிப்பிற்கு உள்ளான 12 பேர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.