/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோடு வேன் கவிழ்ந்து 12 பெண்கள் காயம்
/
லோடு வேன் கவிழ்ந்து 12 பெண்கள் காயம்
ADDED : நவ 13, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் அருகே ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து ஓ.மேட்டுப் பட்டிக்கு இவரது நிலத்தில் நடைபெறும் விவசாய பணிக்காக மினி லோடு வேனில் 20 பெண்களை அழைத்து வந்தார்.
தேவி பட்டினத்தைச் சேர்ந்த டிரைவர் கருப்பசாமி, 37. வேனை ஓட்டி வந்தார்.
நேற்று காலை 8:30 மணிக்கு ஓ.மேட்டுப்பட்டிக்கு அருகே வேன் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
வேனில் வந்த பெண்களில் 12 பேர் லேசான காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

