தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/11 மாதங்களில் 13 வழக்குகள்! ஆனாலும் அரசுத் துறைகளில் தொடருது லஞ்சம்

11 மாதங்களில் 13 வழக்குகள்! ஆனாலும் அரசுத் துறைகளில் தொடருது லஞ்சம்

11 மாதங்களில் 13 வழக்குகள்! ஆனாலும் அரசுத் துறைகளில் தொடருது லஞ்சம்


UPDATED : நவ 08, 2026 05:09 AM

ADDED : நவ 07, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 05:09 AM ADDED : நவ 07, 2026 03:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த வழக்குகள்

* ஆனாலும் அரசுத் துறைகளில் தொடருது லஞ்சம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக 13 வழக்குகளை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ளனர். தற்போது அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொண்டாலும் அரசு அலுவலகங்களில் இன்னும் லஞ்சம் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடக்கிறது. இதனை தடுக்க இன்னும் வேகமாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கும், மக்களின் விண்ணப்பங்கள் மீது உத்தரவுகள் பெறுவதற்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எவ்வித சிரமமும் இன்றி வேலைகள் முடியும் என்ற நிலை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

இதில் மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், பத்திரப்பதிவு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், உணவு பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் மக்கள் நேரடியாக சென்றால் எளிதில் சான்றிதழ்கள் பெற முடியாது.

அதே நேரம் அந்த அலுவலகங்களில் உள்ள புரோக்கர்கள் மூலம் தொடர்பு கொண்டால் அவர்கள் கேட்கும் தொகையை லஞ்சமாக கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக காலதாமதம் இன்றி விண்ணப்பதாரரை தேடி வந்து சான்றிதழ்கள் கொடுக்கும் நிலை காணப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆண்டுதோறும் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்த போதிலும் இன்னும் பல்வேறு அரசு அலுவலங்களில் லஞ்சம் தொடர்கதையாகவே நீடிக்கிறது.

அதிலும் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் சோதனைகள் அதிகரித்த போதிலும் ஒவ்வொரு துறையிலும் நேரடியாக லஞ்சம் வாங்காமல் தங்களது உறவினர்கள், நண்பர்கள், புரோக்கர்கள் மூலம் வாங்கும் நிலை தொடர்கிறது.

2016 முதல் தற்போது வரையிலான 10 ஆண்டுகளில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வருகிறது.

ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்த அதிகாரிகள், சில ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கைதாகி தற்போது நீதிமன்ற விசாரணை, வாய்தாவுக்கு வரும்போது பல மணி நேரம் மன வேதனையுடன் நீதிமன்றத்தில் உட்கார்ந்திருப்பதை காண முடிகிறது.

தற்போதைய த.வெ.க. அரசு லஞ்சத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இன்னும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லஞ்சம் வாங்குவது தொடர் கதையாகவே நீடிக்கிறது.

இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் 13 வழக்குகளை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் நேரடியாக லஞ்சம் வாங்கி கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் தினமும் வந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இன்னும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர் கதையாகவே நீடிக்கிறது.

அதிலும் குறிப்பாக பல்வேறு துறைகளில் உள்ள ஆய்வாளர்கள், ஆய்வு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவது நீடிக்கிறது.

மேலும், முடிந்த பணிகளுக்கு காசோலை வழங்க இரண்டு சதவீதம் லஞ்சம் கொடுத்தால்தான் காசோலைகள் வாங்க முடியும் என்ற நிலை பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது.

எனவே, ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இன்னும் வேகமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us