/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் நீதிமன்றங்களில் 144 வழக்குகள் முடித்து வைப்பு
/
சாத்துார் நீதிமன்றங்களில் 144 வழக்குகள் முடித்து வைப்பு
சாத்துார் நீதிமன்றங்களில் 144 வழக்குகள் முடித்து வைப்பு
சாத்துார் நீதிமன்றங்களில் 144 வழக்குகள் முடித்து வைப்பு
ADDED : நவ 20, 2025 04:10 AM
சாத்துார்: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி சாத்துார் நீதிமன்றங்களில்
2019 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 144 வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது.
சாத்துார் டி.எஸ்.பி. சப் டிவி சனுக்குட்பட்ட டவுன் ட்ராபிக்,வெம்பக்கோட்டை, இருக்கன்குடி, அம்மாபட்டி, ஆலங்குளம், சாத்துார் டவுன் ,தாலுகா காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை ஜே. எம். 2 மாஜிஸ்திரேட் நீதிபதி வரதராஜன் விசாரித்தார்.
ஏழாயிரம் பண்ணை, அப்பைய நாயக்கன் பட்டி, மதுவிலக்கு பிரிவு ,மகளிர் காவல் நிலையம், என்.எச்.டிராபிக் உள்ளிட்டகாவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை ஜே.எம். 1 மாஜிஸ்திரேட் நீதிபதி இலக்கியா விசாரித்தார்.
அடிதடி ,பொது இடத்தில் மது அருந்துதல் ,குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு, வாகன விபத்து, பெண்களுக்கு எதிரான வழக்கு, திருட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்ட வழக்குகள் என மொத்தம் 144 வழக்குகள் நீதிபதிகளால் நேற்று விரைந்து விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது.

