/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் நாய் கடித்து 15 பேர் காயம்
/
காரியாபட்டியில் நாய் கடித்து 15 பேர் காயம்
ADDED : ஜன 05, 2025 05:14 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் நாய் கடித்து சிறுவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காரியாபட்டி பாண்டியன் நகர், பள்ளத்துப்பட்டி பகுதியில் நாய்களுடன் சண்டையிட்டு ஒன்றோடு ஒன்று கடித்துக் குதறியது. அந்நேரம் அப்பகுதியில் நடந்து சென்றவர்களை துரத்தி கடித்தது.
இதில் பச்சமுத்து, மனோகரன், விஷாலி, தினேஷ் பாண்டி, மணிவாசகம், காவியா, முத்துவேல்பாண்டி, சுல்தான் ஆபிதீன், கீர்த்தி 4, எபிராஜ், பொன்ராஜ் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை கடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த 6 பேரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெறி பிடித்த நாய் அப்பகுதியில் சுற்றித் திரிவதால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.