/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருநாய்கள் கடித்து 15 பேர் காயம்
/
தெருநாய்கள் கடித்து 15 பேர் காயம்
ADDED : ஆக 25, 2025 01:32 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதியில் சிறுவர்கள், மூதாட்டி உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் விரட்டிக்கடித்தன.
பெரிய பொட்டல்பட்டி பகுதியில் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று குடியிருப்பு பகுதியில் நடமாடிய தெரு நாய்கள் மக்களை விரட்டி கடித்ததில் ஆறு பேர் காயமடைந்தனர். இதேபோல் எம்.புதுப்பட்டியில் இரு சிறுவர்கள், 70 வயது மூதாட்டி உட்பட 9 பேரை தெருநாய்கள் விரட்டி கடித்தன. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 15 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனை, எம்.புதுப்பட்டி, மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.