/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
16 டன் கந்தகம் பறிமுதல் விருதுநகரில் இருவர் கைது
/
16 டன் கந்தகம் பறிமுதல் விருதுநகரில் இருவர் கைது
ADDED : ஆக 22, 2025 11:25 PM

விருதுநகர்:விருதுநகரில் பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருளான 16 டன் கந்தகத்தை லாரியில் தடையின்மை சான்று இல்லாமல் கொள்முதல் செய்து கொண்டு வந்ததால் போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் ஐ.சி.ஏ., காலனி 4வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் 58. மருளூத்தில் இவரின் சந்திரா கெமிக்கல் ஒர்க்ஸ் நிறுவனம் உள்ளது. பட்டம்புதுார் ஜங்ஷனில் போலீசார் ஒருலாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடையுள்ள 320 மூடைகளில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள 16 டன் கந்தக மூலப்பெருட்கள் இருப்பது தெரிந்தது.
லாரி டிரைவர் கருப்பசாமியை விசாரித்ததில், அவர் அந்த மூடைகளை சந்திரா கெமிக்கல் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறினார். எனவே லாரி, டிரைவருடன் மருளூத்தில் உள்ள கம்பெனிக்கு சென்று ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். இதில் அந்நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 70 ஆயிரம் கிலோ கந்தகம் இருப்பு வைப்பதற்கான உரிமம் டி.ஆர்.ஓ.,வால் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒவ்வொரு முறை கந்தகம் கொள்முதல் செய்யும் போதும் டி.ஆர்.ஓ.,விடம் தடையின்மை சான்று பெற வேண்டும். நேற்று முன்தினம் இந்நிறுவனம் தடையின்மை சான்று பெறாமல் 16 டன் கந்தகத்தை கொள்முதல் செய்து கொண்டு வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கந்தக மூடைகளை ஏற்றி வந்த டிரைவர் கருப்பசாமி, கொள்முதல் செய்த உரிமையாளர் சந்திரன் ஆகியோரை சூலக்கரை போலீசார் கைது செய்து, லாரி, மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கந்தகம், பட்டாசு, தீப்பெட்டிக்குமூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் கை எறிகுண்டு தயாரிப்பு போன்ற ஆபத்தான சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.