/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 16, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் சோனையன், அலுவலர்கள்
அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, வாகனத்தின் டிரைவர் மற்றும் ஒருவர் தப்பி ஓடி விட்டனர்.
வாகனத்தை ஆய்வு செய்ததில் அதில் 2 ஆயிரத்து 211 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. அரிசியை அந்தப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைப்பு செய்தனர்.