/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாளி தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
/
வாளி தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
ADDED : நவ 27, 2025 02:02 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா நத்தம்பட்டியில் வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை கிருத்வீகா முத்ரா உயிரிழந்தார்.
நத்தம்பட்டி வழிவிடும் முருகன் கோயில் பகுதியில் வசிப்பவர் சுரேஷ் குமார் 38. தனியார் கார்மெண்ட்ஸ் ஊழியர். இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில் இவரது மனைவி வைதேகி குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பால் வாங்குவதற்கு பக்கத்து தெருவிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பாத்ரூமில் உள்ள வாளி தண்ணீரில் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்து கிடந்தது.
குழந்தையை மீட்டு நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதிக்கும் போது குழந்தை இறந்தது தெரியவந்தது. நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

