/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 16, 2025 11:56 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஷ்குமார் 22, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் சிறுமியின் வீட்டில் இருந்து பணம், நகைகளை எடுத்து வரச் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்று செலவழித்து விட்டு துன்புறுத்தி உள்ளார்.
ராஜபாளையம் வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, பாலியல் தொல்லை கொடுத்த சதீஷ்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.