/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகாலுக்குள் சரிந்த பேவர் பிளாக் கற்கள்
/
வாறுகாலுக்குள் சரிந்த பேவர் பிளாக் கற்கள்
ADDED : அக் 16, 2025 11:56 PM

விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியில் சேதமான வாறுகால் தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படாததால் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பேவர் பிளாக் கற்கள் ரோடு முழுவதும் வாறுகாலுக்குள் சரிந்தது.
அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்களால் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் சேதமான வாறுகால் தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாறுகாலில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து சென்றது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வாறுகால் தடுப்புச்சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு பேவர் பிளாக் கற்கள் ரோடு சரிந்து வாறுகாலுக்குள் விழுந்தது.
அப்பகுதி மக்கள் நடந்து, வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.