ADDED : நவ 18, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அமைந்துள்ள ரயில்வே அஞ்சலக சேவை எனப்படும் ஆர்.எம்.எஸ்., புக்கிங் கவுன்டர் 24 மணி நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரவு நேரம் மட்டும் செயல்பட்டு வந்த துரித தபால் சேவை, பார்சல் சேவைகள் இனி 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் இருக்கும். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாட்டிற்கும் தபால் சேவை வழங்கப்படுகிறது. நவ. 7 முதல் செயல்பாட்டில் உள்ளது என ரயில்வே அஞ்சல் அலுவலகத்தின் சப் ரெக்கார்டு அலுவலர் சுகந்தி ஜெயலட்சுமி தெரிவித்தார்.

