/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோ-ஆப்டெக்ஸ்சில் 30 சதவீத தள்ளுபடி
/
கோ-ஆப்டெக்ஸ்சில் 30 சதவீத தள்ளுபடி
ADDED : செப் 27, 2025 03:47 AM
விருதுநகர்: விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் சுகபுத்ரா துவங்கி வைத்தார். இங்கு காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள், கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு பருத்தி சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள், லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், மகளிருக்கான சுடிதார் ரகங்கள், நைட்டிகள், குர்தீஸ்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.155 லட்சம் தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். மண்டல மேலாளர் ஸ்டாலின், விற்பனை நிலைய மேலாளர் கீதா பங்கேற்றனர்.