sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2024ல் 108 மூலம் 35 ஆயிரம் பேர் பயன்

/

2024ல் 108 மூலம் 35 ஆயிரம் பேர் பயன்

2024ல் 108 மூலம் 35 ஆயிரம் பேர் பயன்

2024ல் 108 மூலம் 35 ஆயிரம் பேர் பயன்


ADDED : ஜன 25, 2025 04:48 AM

Google News

ADDED : ஜன 25, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2024ல் மட்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி செய்திக்குறிப்பு: 108ஐ அழைப்பவர்களுக்கு சேவை சராசரியாக 12 நிமிடங்களில் வழங்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் 2 முதல் 4 கி.மீ., வரை ஒரு வாகனம், கிராமப்புறங்களில் சராசரியாக 12 முதல் 15 கி.மீ., ஒரு வாகனம் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பாட்டில் உள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது இரவு நேரங்களில் வழித்தெரியாத சிரமத்தை தடுக்க 'அவசரம் 108' என்ற செயலி வசதி மூலம் அழைக்கும் பொழுது அழைப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தினை தெரிவிக்க வேண்டியதில்லை.

அவர்கள் அழைக்கும் இடம் தானாகவே அவசர சேவை மையத்திற்கு ஜிபிஎஸ் மூலம் சென்றடையும்.

2024 ஜன. முதல் டிச. வரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 416 நபர்கள் 108 மூலம் சேவை பெற்றுள்ளனர்.

இது கடந்தாண்டை விட 10 சதவீதம் கூடுதல். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 8259 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிரசவம் தொடர்பாக 7463 தாய்மார் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். 2133 பேர் இருதய நோய்க்கு பயன்படுத்தி உள்ளனர், என்றார்.






      Dinamalar
      Follow us