/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகள் * மாபா பாண்டியராஜன் பேச்சு
/
நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகள் * மாபா பாண்டியராஜன் பேச்சு
நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகள் * மாபா பாண்டியராஜன் பேச்சு
நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகள் * மாபா பாண்டியராஜன் பேச்சு
ADDED : மே 30, 2025 01:34 AM
ராஜபாளையம்:''தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்,'' என, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நாடார் உறவின் முறை மாநாட்டில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசினார்.
தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நாடார் உறவின் முறை மாநாடு நடந்தது. சிறப்பு விருந்தினர் மாபா பாண்டியராஜன் பேசியதாவது: தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் நாடார் சமுதாயத்திற்கு 36 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஆனால் எந்த கட்சியும் வழங்குவதில்லை. தொழில் வளத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடார் சமுதாயம் அரசியலில் பின்தங்கி உள்ளது. அதற்கு காரணம் தொழில் காரணமாக தேர்தலில் வாக்களிப்பது இல்லை. மேலும் ஒரு தொகுதியில் நமது சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் வேறு வேட்பாளருக்கு வாக்களிக்கிறோம் என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டிய அழகர் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு நாடார் பேரவை துணைத்தலைவர் பத்மநாபன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.