/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி -- எச்சரிக்கை பலகை இன்றி விபத்து வாய்ப்பு

ADDED : பிப் 05, 2025 04:48 AM

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலையின்
ரயில் பாதை இணைப்பு பாதை பணிகளில் எச்சரிக்கை பலகை வைக்காததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
திருமங்கலம்-கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி அருகே ரயில் பாதை மேம்பால பணி தொடக்க நிலையில் உள்ளது.
இதற்கான மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் எஸ்.ராமலிங்காபுரம் பிரிவு சர்வீஸ் ரோடு தொடக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்காமல் தடையை அமைத்துள்ளனர்.
இதனால் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கர்: அட்டை மில் முக்கிலிருந்து ராஜபாளையம் அடுத்த முதுகுடி முன்பு வரை 5 கி.மீ சுலபமாக நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கலாம். ஆனால் தற்போது வரை ரயில்வே பாதை மேம்பாலம் முடிவடையாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதை அறியாத கனரக வாகனங்கள் டூவீலர்கள் பாலத்தின் உச்சிவரை வந்து சங்கடத்திற்கு உள்ளாகி திரும்புகின்றனர். கவனம் இல்லையெனில் தடுப்பை தாண்டி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
மேம்பால சாலை தொடக்கத்திலேயே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.