/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசுவை கொன்று இறைச்சி திருடிய 4 பேர் சிக்கினர்
/
பசுவை கொன்று இறைச்சி திருடிய 4 பேர் சிக்கினர்
ADDED : ஜன 03, 2026 07:13 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: பசுவை கொன்று இறைச்சி திருடிய நான்கு பேர் போலீசில் சிக்கினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் கொந்தராயன்குளத்தை சேர்ந்தவர் மாகாளி, 40. இவரது பசுவை வெட்டி கொன்று இறைச்சி திருடப்பட்டது. கிருஷ்ணன்கோவில் போலீசார், கணபதிசுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த காளிராஜ், 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இவரது உறவினர்கள் கொந்தராயன் குளத்தில் வசித்து வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, தன் நண்பர்கள் ஜெயபாரதி, 19, மகேஷ், 23, ஆனந்த்,21, ஆகியோருடன் வந்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார்.
அப்போது, வழியில் தனியாக நின்றிருந்த பசுவை வெட்டி கொன்று, இறைச்சியை எடுத்துச் சென்று, விற்பனை செய்துள்ளனர். அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். காளிராஜ் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து, வனவிலங்குகளை வேட்டையாடுவதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

