/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்ட விரோத ஆலையில் தீ விபத்து: 2 சிறுவர் பலி
/
சட்ட விரோத ஆலையில் தீ விபத்து: 2 சிறுவர் பலி
ADDED : ஜன 03, 2026 07:12 AM

சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்த போது, மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அசாம் சிறுவர்கள் இருவர் தீயில் கருகி பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார், நத்தத்துபட்டியை சேர்ந்தவர் தி.மு.க., கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலர் சரவணகுமார். இவரது மனைவி கவிதா. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், கே.மேட்டுப்பட்டியில் உள்ளது.
அங்கு, வட மாநில தொழிலாளர்களை வைத்து, சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்துள்ளார். நேற்று மாலை, 6:00 மணிக்கு மிஷினில் பட்டாசு திரி தயாரித்துக் கொண்டிருந்தபோது, மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிகுல் அலி, 13, செய்யது உசேன், 14, ஆகிய இரு சிறுவர்கள் உடல் கருகி பலியாகினர்.
சாத்துார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி., நாகராஜன், ஆர்.டி.ஓ., கனகராஜ், தாசில்தார் ராஜாமணி, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்தின் போது, ஐந்து பேர் பணியில் இருந்துள்ளனர்.
மூவர் தப்பிய நிலையில் இருவர் பலியாகினர். அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

