/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ. தொட்டியங்குளத்தில் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
அ. தொட்டியங்குளத்தில் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அ. தொட்டியங்குளத்தில் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அ. தொட்டியங்குளத்தில் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜன 03, 2026 06:21 AM

காரியாபட்டி:காரியாபட்டி அ. தொட்டியங்குளத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய், ஊரை ஒட்டி உள்ளது. கண்மாய் கரையை சிலர் சேதப்படுத்தி வீடுகள், குடிசைகள் கட்டினர். கண்மாய் நிரம்பும்போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து 2020ல் பூமிநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை பலப்படுத்த வேண்டினார்.
இந்நிலையில் அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பொதுவான உத்தரவை சென்ற ஆண்டு மார்ச்சில் ஐகோர்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அ. தொட்டியங்குளத்தில் நேற்று தாசில்தார் மாரீஸ்வரன் தலைமையில், கரையில் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள், குடிசைகள் அகற்றப்பட்டன. திருச்சுழி டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாரீஸ்வரன், தாசில்தார், கூறியதாவது.
தற்போது கோயில்களில் மார்கழி விசேஷங்கள் நடப்பதால் கால அவகாசம் கேட்டனர். அதனால் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படவில்லை. விரைவில் நோட்டீஸ் அனுப்பி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

