/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் உண்டியல் திறப்பு; ரூ.15.97 லட்சம் காணிக்கை
/
சதுரகிரியில் உண்டியல் திறப்பு; ரூ.15.97 லட்சம் காணிக்கை
சதுரகிரியில் உண்டியல் திறப்பு; ரூ.15.97 லட்சம் காணிக்கை
சதுரகிரியில் உண்டியல் திறப்பு; ரூ.15.97 லட்சம் காணிக்கை
ADDED : ஜன 03, 2026 07:30 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் நடந்த உண்டியல் திறப்பில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 15.97 லட்சம் வசூலானது.
இக்கோயிலில் டிச., 29, 30ல் அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. இதில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் ரூ. 14 லட்சத்து 52 ஆயிரத்து 593, தங்கம் 8 கிராம், வெள்ளி 28 கிராமும், டிச.31ல் சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 791ம் காணிக்கையாக வசூலானது.
உண்டியல் எண்ணும் பணியில் அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.