/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2024ல் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4579 பிரசவங்கள்: 2341 ஆண், 2065 பெண் குழந்தைகள் பிறப்பு
/
2024ல் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4579 பிரசவங்கள்: 2341 ஆண், 2065 பெண் குழந்தைகள் பிறப்பு
2024ல் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4579 பிரசவங்கள்: 2341 ஆண், 2065 பெண் குழந்தைகள் பிறப்பு
2024ல் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4579 பிரசவங்கள்: 2341 ஆண், 2065 பெண் குழந்தைகள் பிறப்பு
ADDED : ஜன 09, 2025 04:48 AM
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து அதிக கவனிப்பு தேவைப்படும், ரத்த சோகை, அதிக ரத்த அழுத்தம், இருதய நோய், உதிரப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கர்ப்பிணிகள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் மாவட்டத்தில்உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள், செவிலியர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணிகளும் மருத்துவர்களின் நேரடி தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்களுக்கு தொடர் பயிற்சி முகாம்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. கங்காரு சிகிச்சை முறை, தாயுடன்சேர்ந்த சிகிச்சை முறை, தாய்ப்பால் வங்கி ஆகியவை உள்ளது. இங்கு கடந்தாண்டு 1951 பச்சிளங்குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 1 கிலோவுக்கும் குறைவான எடையில் 38 குழந்தைகளும், 1 முதல் 2 கிலோவுக்குள் 297 குழந்தைகளும், 2 கிலோவுக்கு மேல் 1616 குழந்தைகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் வென்டிலேட்டர் கருவியில் 292 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு ஜன. 1 முதல் டிச. 31 வரை மொத்தம் 4579 பிரசவங்கள்நடந்துள்ளது. இதில் 2341 ஆண் குழந்தைகளும், 2065 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. இதில் 66 இரட்டையர்கள் பிறந்துஉள்ளனர். மேலும் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் ஜெயசிங் கூறியதாவது:
இங்குள்ள தாய்பால் வங்கிக்கு தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் தாய்மார், அதிக பால் சுரக்கும் தாய்மார், வெளியில் இருக்கும் தாய்மாரிடம் இருந்து தாய்பால் தானமாக பெறப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த தாய்பால் சுத்திகரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால் நோய் தொற்று குறைவதுடன், குறைமாதக் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.
மேலும் கங்காரு சிகிச்சை முறையில் குறைமாதம், எடை குறைந்த குழந்தைகள் தாயின் நெஞ்சுப்பகுதியில் வைத்து சிகிச்சை கொடுக்கப்படுவதால் குழந்தைகளுக்கு தேவையான வெப்பம் கிடைப்பதுடன், தாயுடன் பிணைப்பு அதிகரித்து நோயிலிருந்து விரைந்து குணமாகின்றனர்.
'எம்-நிக்கு' சிகிச்சையில் எல்லா நேரமும் குழந்தைகள் அம்மாவிற்கு அருகிலேயே இருப்பதால் தாய்க்கு அதிக பால் சுரப்பது, குழந்தைக்கு நோய்த்தொற்று குறைவது,உடல், மூளை வளர்ச்சி நன்கு இருக்கும்.
இதனால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பது குறைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்க பெரும்பங்கு வகிக்கிறது, என்றார்.