/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிற்றுநர் தேர்வில் 47 பேர் ஆப்சென்ட்
/
பயிற்றுநர் தேர்வில் 47 பேர் ஆப்சென்ட்
ADDED : பிப் 04, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வில்லிப்பத்திரி புனித பிரான்சிஸ் டே சேல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நடந்தது.
இதில் விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 1427 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1380 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 47 பேர் தேர்வு எழுத வரவில்லை.

