sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

6 மாதத்தில் 191 திருட்டு வழக்குகள் ரூ. 93 லட்சம் பொருட்கள் மீட்பு

/

6 மாதத்தில் 191 திருட்டு வழக்குகள் ரூ. 93 லட்சம் பொருட்கள் மீட்பு

6 மாதத்தில் 191 திருட்டு வழக்குகள் ரூ. 93 லட்சம் பொருட்கள் மீட்பு

6 மாதத்தில் 191 திருட்டு வழக்குகள் ரூ. 93 லட்சம் பொருட்கள் மீட்பு


ADDED : ஜூலை 15, 2011 09:59 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடந்த 191 திருட்டு வழக்குகளில் 131 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 93 லட்சத்து 66 ஆயிரத்து 919 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் பகுதியில் வழிப்பறி வழக்குகள் எட்டு பதிவு செய்யப்பட்டு, நான்கும், இரவு நடந்த திருட்டில் 15 ல் 5 ம், சதாரண திருட்டில் 31 ல் 14ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருட்டு போன 35 லட்சத்து4360 ரூபாய் மதிப்பு பொருட்களில், 10 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சிவகாசி பகுதியில் 20 திருட்டு வழக்குகளில் 14 கண்டுபிடிக்கப்பட்டு, 7 லட்சத்து 58 ஆயிரத்து 590 ரூபாயில், 5 லட்சத்து 26 ஆயிரத்து 590 ரூபாய் மதிப்பு பொருட்களும், அருப்புக்கோட்டை பகுதியில் 27 வழக்குகளில் 18 கண்டுபிடிக்கப்பட்டு, 12 லட்சத்து 31 ஆயிரத்து 880 ரூபாயில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 165 ரூபாய் மதிப்பு பொருட்களும், ராஜபாளையம் பகுதியில் 43 வழக்குகளில் 35 கண்டுபிடிக்கப்பட்டு, 66 லட்சத்து 40 ஆயிரத்து 840 ரூபாயில், 62 லட்சத்து 69 ஆயிரத்து 289 ரூபாய் மதிப்பு பொருட்களும், சாத்தூர் பகுதியில் 14 வழக்குகளில் 13 கண்டுபிடிக்கப்பட்டு, 8 லட்சத்து 94 ஆயிரத்து 720 ரூபாயில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பு பொருட்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 25 வழக்குகளில் 14 கண்டுபிடிக்கப்பட்டு, 8 லட்சத்து 99 ஆயிரத்து 450 ரூபாயில், 3 லட்சத்து 51 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பு பொருட்களும், திருச்சுழி பகுதியில் 11 வழக்குகளில் 6 கண்டுபிடிக்கப்பட்டு, 5 லட்சத்து 47 ஆயிரத்து 336 ரூபாயில், 4 லட்சத்து 66 ஆயிரத்து 625 ரூபாய் மதிப்பு பொருட்கள் என , மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், 191 திருட்டு வழக்குகளில் 131 கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு கோடியே 41 லட்சத்து 3635 ரூபாய் பொருட்களில், 93 லட்சத்து 66 ஆயிரத்து 919 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் திருட்டுகளை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் , நஜ்மல் கோதா எஸ்.பி ., உத்தரவுபடி, தாலுகா அளவில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் நான்கு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us