ADDED : ஏப் 10, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் டாஸ்மாக் கடை பின்புறம் சந்தேகப்படும்படியான நின்ற நபர் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்.
போலீசார் அவர் இருந்த பகுதியில் சட்ட விரோதமாக 911 மது பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அங்கு விற்பனை செய்தவர் பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த காளிராஜன்,35, என தெரிய வந்தது. போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

