/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ஆலை உரிமையாளருக்கு ஜாமின்

ADDED : மார் 02, 2024 01:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு விபத்தில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு, நீதிமன்ற உத்தரவின் படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேசுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.
பிப்., 17ல் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ் குமார் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் முன்ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், பலியான 11 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் பட்டாசு ஆலை உரிமையாளர் வழங்கி அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் முன்னிலையில் பலியான 11 பேரில், 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் டி.டி.,யாக வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட ஒருவருக்கு, வாரிசு யார் என்பதில் தீர்வு ஏற்படாததால் அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.