/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : டிச 11, 2025 06:38 AM

சிவகாசி: திருத்தங்கலில் விருதுநகர் மெயின் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் தரகன் தோட்ட தெரு, ஆதி நாடார் தெரு, சின்னப்பன் நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
பொதுவாக திருத்தங்கலில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
இதனால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தவிர போக்குவரத்து நிறைந்த ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே சேதமடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.