/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்
/
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்
ADDED : அக் 24, 2024 04:40 AM

சாத்துார்: சாத்துார் அருகே நகராட்சிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சாத்துார் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் 20 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் ஆகி வருகிறது.
இதனைக் கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பகிர்மான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் நகராட்சிக்கு வரும் குடிநீர் அளவு குறைந்து விடுகிறது.
தற்போது சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் மேற்கு பகுதி சர்வீஸ் ரோட்டில் சின்ன கொல்லப்பட்டி விலக்கு அருகே குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது.
சர்வீஸ் ரோட்டில் அதிக எடை கொண்ட லாரிகள் சென்று வருவதால் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. பலகீனமான குடிநீர் குழாயை அகற்றிவிட்டு புதிய குழாய் இருப்பதாய் பதிக்க வேண்டும்.
கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதால் நகருக்கு வரும் குடிநீரின் அளவு மிகவும் குறைந்து உள்ளது.
நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.