ADDED : ஜூலை 19, 2026 11:34 PM

சாத்துார்: சாத்துார் அருகே நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் ஸ்நேகா பட்டாசு கடை அருகில் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வார காலமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள மழை நீர் வடிகாலில் கலந்து வருகிறது.
தற்போது வெயில் அதிகரித்து வருவதால் நீரின் தேவை அதிகமாக உள்ளது. குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சரி செய்யாமல் இருப்பதால் உடைப்பு மேலும் அதிகரித்து கூடுதலான குடிநீர் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
