/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒ த்தையாலில் பெயரளவுக்கு நடந்துள்ள வாறுகால் பணி
/
ஒ த்தையாலில் பெயரளவுக்கு நடந்துள்ள வாறுகால் பணி
ADDED : மார் 08, 2024 12:17 PM

சாத்துார்: சாத்துார் அருகே ஒத்தையால் கிராமத்தில் பெயரளவிற்கு நடந்த வாறுகால் கட்டும் பணியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சாத்துார் ஏழாயிரம் பண்ணை சாலையில் உள்ளது ஒத்தையால் கிராமம். கிராமத்தில் உள்ள சிறிய வாறுகால்களில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள பெரிய வாறுகாலுக்கு கழிவு நீர் வந்து சேருகின்றன. இந்த கழிவு நீர் முழுவதும் இந்த பகுதியில் உள்ள பெருமாள் கோயில் வழியாக சென்று அருகிலுள்ள சுடுகாட்டு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இங்கு மத்தியஅரசின் பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வாறுகால் கட்டப்பட்டு உள்ளது. முழுமையாக பழைய வாறுகால் அகற்றப்படாமல் ஆங்காங்கே பேட்ஜ் பணிகள் நடந்துள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய வாறுகாலில் ஆங்காங்கே பூச்சு வேலை மட்டும் செய்து விட்டு 20 மீட்டர் அளவிற்கு புதிய வாறுகாலை கட்டி உள்ளனர். முழுமையாக வாறுகால் கட்டாததால் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு செல்லுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் சாலையில் தேங்கும் வகையில் தரை மட்டத்தோடு மீதி பகுதியில் கழிவு நீர் செல்கிறது. இதனால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி கொசு அதிகஅளவில் உற்பத்தி ஆவதோடு கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒத்தையால் மெயின் ரோட்டில் முழுமையாக வாறுகாலை கட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொறியாளர் பாலாஜி கூறியதாவது: பிரதம மந்திரி கிராம முன்னேற்றம் திட்டத்தில் ரூ. 5 லட்சத்தில் 3 இடங்களில் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. பழைய வாறுகாலில் ஆங்காங்கே சேதமடைந்த பகுதியில் பேட்ஜ் பணிகள் செய்யப்பட்டுள்ளது,என்றார்.

