/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர்கள் சூழ்ந்து அடைபட்டுபோன மழைநீர் வரத்து ஓடை
/
புதர்கள் சூழ்ந்து அடைபட்டுபோன மழைநீர் வரத்து ஓடை
ADDED : ஜூலை 19, 2025 11:26 PM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் பெரிய கண்மாய்க்கு செல்லும் மழைநீர் வரத்து ஓடை புதர்கள் சூழ்ந்துஉள்ளதை சரி செய்ய வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருமண மண்டபத்திற்கு எதிரே பிரதான மழைநீர் வரத்து ஓடை உள்ளது. இங்குள்ள காட்டு பகுதிகளிலிருந்து மழை காலத்தில் வெள்ளம் ஓடை வழியாக பெரிய கண்மாய்க்கு சென்றடையும். ஓடையை முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டதால் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஓடை தடைபட்டு மழை நீர் வெளியேற முடியாமல்தெருக்களில் வந்து விடுகிறது. ஒரு சில பகுதிகளில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்கு முன்பு ஓடையை தூர்வாரி முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்லும் வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவிவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.