/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி
/
அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி
ADDED : நவ 20, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் நோக்கி பேரையூரில் இருந்து வந்த அரசு பஸ் கண்ணாடி நேற்று மாலை உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நேற்று மாலை பேரையூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் செல்வதற்காக செங்குன்றாபுரம் அருகே சமத்துவபுரம் ரோட்டில் மாலை 4:25 மணிக்கு வந்தது.
அப்போது பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டதாக உணர்ந்த பயணிகள் அச்சமடைந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் கீழே இறங்கி பார்த்தனர். ஆனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி தானாக உடைந்தது தெரிந்தது. இதையடுத்து மாற்று பஸ்சில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

