/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதையில் ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணன் திருமணத்தன்று சோகம்
/
போதையில் ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணன் திருமணத்தன்று சோகம்
போதையில் ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணன் திருமணத்தன்று சோகம்
போதையில் ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணன் திருமணத்தன்று சோகம்
ADDED : ஜன 19, 2025 11:10 PM
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேஅண்ணன் திருமணத்தன்று வாலிபர் மதுபோதையில் ஊருணியில் மூழ்கி பலியானார்.
திருச்சுழி அருகே ஆலடிபட்டியைச் சேர்ந்த தொழிலாளி வடிவேல்முருகன் 25, போதைக்கு அடிமையாக இருந்தார். குடித்து விட்டு அடிக்கடி காணாமல் போய் விடுவார். பிறகு 2, 3 நாட்கள் கழித்து வீடு திரும்புவார். இந்நிலையில் இவரது அண்ணன் நாகேந்திரன் திருமணம் நேற்று காலை திருச்சுழி பூமிநாதர் கோயிலில் நடக்கயிருந்தது. இதற்கான பணிகளில் குடும்பத்தார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற வடிவேல்முருகன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை. சர்ச் அருகில்உள்ள ஊருணியில் போதையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். போதையில் ஊருணியில் தவறி விழுந்து மூழ்கினார்.
நேற்று காலை வடிவேல் முருகன் இறந்த நிலையில் மிதந்ததை பார்த்து ஊரார் திருச்சுழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரித்தனர். இதையடுத்து வடிவேல்முருகன் இறந்த சோகத்திலிருந்த குடும்பத்தினர் அவரது அண்ணன் திருமணத்தை வீட்டில் நடத்தி முடித்தனர்.