ADDED : ஜன 22, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து 1:30 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனையை செய்தனர்.
மெட்ரிக் பள்ளிகள் டி.இ.ஓ., ஜான் பாக்கியசெல்வம் தலைமை வகித்தார்.
ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் ஓம், சிலுவை, பிறை நிலா என்ற வடிவில் குறியீடுகள் வரையப்பட்ட இடத்தில் மூவர்ண உடையணிந்து மாணவர்கள் நின்று சிலம்பம் சுற்றினர். இதை நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிர்வாக அதிகாரி அரவிந்த் குழுவினர் பதிவு செய்தனர்.
இதில் எல்.கே.ஜி., முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 220 பேர் பங்கேற்றனர்.