/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விண்ணப்பிக்க அதிக பணம் வசூலித்தால் நடவடிக்கை
/
விண்ணப்பிக்க அதிக பணம் வசூலித்தால் நடவடிக்கை
ADDED : செப் 30, 2024 04:27 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியங்களில் விண்ணப்பிக்க அதிக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. கல்வி, திருணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை விபத்து மரண உதவி தொகைகள், கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம், பெண், திருநங்கை ஆட்டோ டிரைவர்களுக்கான மானியம் வழங்கும் திட்டம் ஆகிய நலத்திட்டங்களுக்கான உதவி தொகைகள் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டங்களுக்கான உதவி தொகை பெற உரிய விண்ணப்பத்துடன் உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர், வி.ஏ.ஓ.,, வேலையளிப்போர், பதிவு பெற்ற தொழிற்சங்க உறுப்பினர், பணி சான்று வழங்க அனுமதிக்கப்பட்ட அலுவலர்களிடம் உறுதிமொழி சான்று பெற்று tnuwwb.tn.gov.in மூலம் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க பொது சேவை, இசேவை மையங்களில்சேவை கட்டணமாக ரூ.60 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரூ.60க்கும் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. தொழிற்சங்கங்கள் முரணாக வசூலிக்க கூடாது.
எனவே தொழிலாளர்கள் நல வாரிய நலத்திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கட்டணம் ரூ.60க்கு மேலாக ஏதேனும் தொழிற்சங்கங்கள் அல்லது சேவை மையங்கள் தொழிலாளர்களிடம் பணம் கேட்டால் அது தொடர்பாக உரிய நபர் மீது எழுத்து பூர்வமான புகார் மனுவை தொழிலளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளி சமர்ப்பிக்கலாம்.