sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

/

சிவகாசியில் அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

சிவகாசியில் அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

சிவகாசியில் அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு


ADDED : மார் 03, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 03, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூ.10 கோடி மதிப்பில் நடந்து வரும் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் ஆணையூர், சித்துராஜபுரம், தேவர்குளம் உட்பட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 2021 ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால் முதற்கட்டமாக திருத்தங்கல், சிவகாசி நகராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டு, மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

தி.மு.க., ஆட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி, தாம்பரம், கடலுார், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கும் ஒரே வடிவமைப்பில் புதிய அலுவலகம் அமைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு பஸ் ஸ்டாண்ட் அருகே சாத்துார் ரோட்டில் 2.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய அலுவலகமும், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கு 2023 ஏப்.ல் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. புதிய மாநகராட்சி அலுவலகத்தில் கீழ் தளத்தில் 15,970 சதுர அடி பரப்பளவில் பார்க்கிங் வசதி, தரை தளத்தில் 15, 920 சதுர அடி பரப்பில் மேயர், கமிஷனர், துணை மேயர், வருவாய் துறை, ஆய்வு கூட்ட அரங்கு, முதல் தளத்தில் 14,638 சதுர அடியில் பொறியியல் பிரிவு, 100 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கு, பிற துறைகளுக்கான தனித்தனி அறைகளுடன் புதிய அலுவலகம் அமைய உள்ளது.

இந்நிலையில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us