/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் தேவை: வன குற்ற செயல்களை தடுப்பது அவசியம்
/
கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் தேவை: வன குற்ற செயல்களை தடுப்பது அவசியம்
கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் தேவை: வன குற்ற செயல்களை தடுப்பது அவசியம்
கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் தேவை: வன குற்ற செயல்களை தடுப்பது அவசியம்
ADDED : செப் 27, 2025 11:16 PM

இந்தியாவின் 51வது, தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகமான ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் 64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு புலிகள் வாழும் பகுதியாகவும், 37 லட்சம் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் உள்ளது.
இப்பகுதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் என நான்கு வனச்சரங்கங்களை கொண்டுள்ளது.
இங்கு புலிகள், நீலகிரி வரையாடுகள், சிறுத்தை, யானை, மான், சாம்பல் நிற அணில்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.
மதுரையில் புலிகள் காப்பக இயக்குனர் அலுவலகமும், மேகமலை , ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை இயக்குனர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வனச்சரகத்திலும் வனச்சரகர், வன பாதுகாவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் தினமும் மலைப்பகுதியில் பல கிலோமீட்டர் நடந்து சென்று ரோந்து பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள், வன பாதுகாவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த புலிகள் காப்பகத்தில் குற்றச்செயல்களை தடுக்கவும், வெயில் காலங்களில் தீ விபத்துகளை தடுக்கவும், தீத்தடுப்பு கோடுகளை அமைக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுகின்றனர்.
இதில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் பல வனப் பகுதி பீட்டுகள் உள்ள நிலையில் தினசரி ரோந்து பணியில் குறைந்த அளவே வேட்டைதடுப்பு காவலர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை போதுமானதாக அளவிற்கு இல்லாததால் அவ்வப்போது வனவிலங்குகள் வேட்டையில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சில குற்றங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தாலும், பல்வேறு குற்றங்களுக்கு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துகின்றனர். ஆனாலும் ஆண்டுதோறும் நடக்கும் வன குற்ற வழக்குகள் குறையவில்லை. அதிகரித்து வருகிறது.
இதற்கு போதிய அளவிற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாதது ஒரு முக்கிய காரணமாகும். இதனால் வன குற்றங்கள் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.
இதனை தடுக்க ஒவ்வொரு வனச்சரகத்திலும், ஒவ்வொரு பீட்டிற்கும் கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிப்பது அவசியம். இதற்கு மத்திய, மாநில வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.