/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பண மோசடியில் அ.தி.மு.க., பிரமுகருக்கு ஜாமின் ரூ.10 லட்சம் டிபாசிட் கட்ட உத்தரவு
/
பண மோசடியில் அ.தி.மு.க., பிரமுகருக்கு ஜாமின் ரூ.10 லட்சம் டிபாசிட் கட்ட உத்தரவு
பண மோசடியில் அ.தி.மு.க., பிரமுகருக்கு ஜாமின் ரூ.10 லட்சம் டிபாசிட் கட்ட உத்தரவு
பண மோசடியில் அ.தி.மு.க., பிரமுகருக்கு ஜாமின் ரூ.10 லட்சம் டிபாசிட் கட்ட உத்தரவு
ADDED : அக் 19, 2024 03:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த ரவீந்திரன் 49, என்பவரின் உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணமோசடி செய்த வழக்கில் கைதான அ.தி.மு.க.,பிரமுகர் விஜய நல்ல தம்பிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதில் விருதுநகர் நீதிமன்றத்தில் ரூ. 10 லட்சம் டிபாசிட் கட்டவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தினமும் கையெழுத்திடவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
சாத்துாரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரின் அக்கா மகனுக்கு ஆவினில் மாவட்ட மேலாளர் வேலை வாங்கி தருவதாக தனது கடைக்கு வந்து சென்ற மாரியப்பன் மூலம் வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலாளரும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியுமான விஜய நல்ல தம்பி, அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30 லட்சம் பெற்று, வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்துள்ளார்.
ரவீந்திரனின் புகாரில் விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2021 ல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த இரு வாரத்திற்கு முன் விஜய நல்ல தம்பியை போலீசார் கைது செய்தனர். இதில் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விஜயநல்லதம்பி மனு செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், விருதுநகர் நீதிமன்றத்தில் ரூ. 10 லட்சம் டிபாசிட் கட்டவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மறு உத்தரவு வரும் வரை தினமும் கையெழுத்திடவும் நிபந்தனைகள் விதித்து விஜய நல்ல தம்பிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

