நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ராமானுஜ புரத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள் நடந்தது. காலையில் சென்ன கேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 12 மணிக்கு உச்சிக்கால பூஜை துவங்கியது. சுவாமியை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு சென்ன கேசவ பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.