ADDED : ஜன 14, 2026 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டு களுக்கு பின் சந்திப்பு நடந்தது.
இக்கல்லுாரியின் 1983-ம் ஆண்டு மாணவர்களின் நட்பு சங்கம விழா மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இளங்கோவன் வரவேற்றார். மறைந்த நண்பர்கள், ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.நண்பர்களுக்கிடையே அறிமுக நிகழ்ச்சிக்கு பின் சாதனையாளர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.
நட்பை பேணுவதோடு, கிராமப்புற மாணவர்களின் கல்வி, சமூக மேம்பாட்டிற்கு பங்காற்றும் விதமாக அறக்கட்டளை தொடங்குவது குறித்து ஆலோசித்தனர். முன்னாள் மாணவர் திருமலைக் குமார் நன்றி கூறினார்.

