/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகு பூஞ்சோலை வீரசோழனில் வியக்க வைக்கும் மரங்கள்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகு பூஞ்சோலை வீரசோழனில் வியக்க வைக்கும் மரங்கள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகு பூஞ்சோலை வீரசோழனில் வியக்க வைக்கும் மரங்கள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகு பூஞ்சோலை வீரசோழனில் வியக்க வைக்கும் மரங்கள்
ADDED : ஜூன் 15, 2025 11:58 PM

மருத்துவ பணிகள் செய்வது மகத்துவம் என்றால், மரங்களை நட்டு வளர்ப்பதும் மகத்துவமே. அரசு பணியில் இருந்தாலும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்கிற மனசு இருக்கே அதுவே பெரிய விஷயம்.
அதுவும் கிராமப்புறங்களில் உள்ள அரசு கட்டடங்களில் உள்ள வளாகங்கள் பெரும்பாலும் பராமரிப்பின்றி தான் இருக்கும். ஒரு சில இடங்களில் தான் ஆர்வமும், அக்கறையும் இருக்கும். அந்த வகையில் நரிக்குடி வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் அப்போது பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் புங்கை, வேம்பு, கொன்றை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தொடர்ந்து பராமரித்து, கவனித்து வந்ததால், இத்தனை ஆண்டுகள் கடந்து, இன்றைய தலைமுறையினருக்கு பயனுள்ள வகையில் வளர்த்து வைத்திருக்கிறார்கள் என்றால் உண்மையிலே அப்பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். வியக்க வைக்கும் மரங்களால் வெயில் காலத்தில் கூட குளுமையான சூழல் உள்ளது.
அது மட்டுமல்ல அங்கு வரக்கூடிய நோயாளிகள், மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தாலே பாதி நோய்கள் குணமாகிவிடும் என்கிற அளவிற்கு ரம்யமாக இருக்கும். கொன்றை மரங்களின் பூக்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இங்கு பணி புரியும் மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி இயற்கை சூழலில் பணியாற்றுவதை மிகவும் நேசித்து பணியாற்றுவர்.
ரம்யமான சூழலில் பணியாற்றும் போது மனதில் தோன்றும் குணங்களும் இதமாகவே இருக்கும். அங்கு வரும் நோயாளிகளை கடிந்து பேசாமல் கனிவோடு கவனிக்கும் எண்ணமும் உருவாகும். இதுபோன்று அழகான சூழலை அனைத்து இடங்களில் உருவாக்க முன்வர வேண்டும்.