/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வி.நாங்கூரில் இடியும் நிலையில் அங்கன்வாடி
/
வி.நாங்கூரில் இடியும் நிலையில் அங்கன்வாடி
ADDED : டிச 12, 2024 04:48 AM

காரியாபட்டி: வி.நாங்கூரில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் நுாலகத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்ட வேண்டுமென கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி வி.நாங்கூரில் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது. கூரை ஓடால் வேயப்பட்டிருந்தது. காற்றோட்டம் இல்லாததால் வெயில் நேரங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நாளடைவில் ஓடு விரிசல் ஏற்பட்டு, கட்டடத்தின் சுவர்கள் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து அங்குள்ள நுாலகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டது.
தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நுாலக கட்டடத்திற்கு குரூப் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு படித்த இளைஞர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.