/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
ADDED : ஏப் 05, 2025 02:38 AM

சிவகாசி:விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில், செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் எனப்படும் கண்ணுக்கு மையிடும் குச்சி கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 22 குழிகளில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, தங்க மணி, சூதுபவள மணிகள் உள்ளிட்ட 4,420 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெண்கள் கண்களுக்கு மை தீட்ட பயன்படுத்தப்படும் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில், 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது. பண்டைய தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களை பயன்படுத்தியதையும் கண்டுபிடிப்புகள் உலகிற்கு பறைசாற்றுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

